Wednesday, January 7, 2009
பளை படையினரின் கட்டுப்பாட்டில்: புலிகளின் ஆயுதக்கிடங்குகள் மீட்பு
முகமாலை மற்றும் கிளாலிப் பிரதேசங்களை தமது நேற்று (06) கைப்பற்றிய
பிரிகேடியர் கமால் குணரட்ண தலைமையிலான 53ம் படையணியினரும் பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான 55ம் படையணியினரும் மேலும் தமது நிலைகளில் இருந்து 5.5 கிலோமீற்றர் தூரம் முன்னேறி பளைப்பிரதேசத்தை இன்று பிற்பகல் 3.30 மணியளவில் தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதாக பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் அச்செய்தியில் புலிகளின் பலத்த எதிர்ப்புக்கு பதிலடி கொடுத்தவாறு முன்னேறிய படையினர் புலிகளின் ECHO-9 Base, GOLF-7 Base எனப்படுகின்ற முகமாலைப்பிரதேச புலிகளின் கட்டளை மையங்களை நிர்மூலம் செய்துள்ளதுடன் ECHO-3 Base and DELTA-2 Base என்கின்ற நிலைகளையும் தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளதுடன் அப்பிரதேசத்திற்கான புலிகளது ஆயுத வினியோக களஞ்சியங்களையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது. நிலத்திற்கு அடியில் மிகவும் நுட்பமாக அமைக்கப்பட்டிருந்த மேற்படி களஞ்சியத்திலிருந்து ஏகப்பட்ட இராணுவ பொருட்களை படையினர் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment