Wednesday, January 14, 2009

புலிகளின் சடலங்களை அடக்கம் செய்தது இலங்கை அரசு

இலங்கையின் வடபகுதியில் நடைபெறும் போரில் பலியாகி, வவுனியா மன்னார் மருத்துவமனைகளில் இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் 57 சடங்கள் இன்று அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டதாகப் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

வவுனியா வைத்தியசாலையில் இராணுவத்தினரால் போர்முனைப் பகுதிகளில் இருந்து கொண்டு வந்து ஒப்படைக்கப்பட்டு பல நாட்களாக வைக்கப்பட்டிருந்த 42 சடலங்களும், மன்னார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த 15 சடலங்களுமே இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

போர்முனைகளில் இராணுவத்தினரால் கைப்பற்றப்படும் விடுதலைப் புலிகளின் சடலங்கள், அவர்களால் உரிமை கோரப்படுவதும், பின்னர் அவைகள் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினர் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்படுவதும் வழக்கமான நடவடிக்கையாகும்.

ஆனால் தற்போது விடுதலைப் புலிகளிடம் கையளிப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தினால், நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அரச செலவில் அந்தச்சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
Thanks BBC

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com