ஊடகத்துறையினரின் குரல்வளைகள் தொடர்ந்தும் நெருக்கப்படுகின்றது. விசேட விசாரணைக் குழுவிற்கு ஆணையிட்டுள்ளாராம் ஜனாதிபதி.
இன்று காலை 6.40 மணியளவில் றிவிர பத்திரிகையின் ஆசிரியர் உபாலி தென்னக்கோண் தாக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத குழுவொன்று இவர் மீது இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அவர் இத்தாக்குதலில் சிறுகாயங்களுக்கு உட்பட்ட தனது துணைவியார் சகிதம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் உப்பாலி தென்னக்கோணை எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கரமசிங்க நேரில் சென்ற பார்வையிட்டுள்ளதுடன் ஊடகத்துறையினர் மீதான தாக்குதலாளிகளை கண்டுபிடிக்க புதியதோர் பொலிஸ் பிரிவை நிறுவுமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
0 comments :
Post a Comment