Sunday, January 11, 2009

முல்லைத்தீவிலிருந்து புலிகள் தப்பிவிடாதபடி சுற்றிவளைப்பு ‘சகல திசைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தல்’ - கடற்படைப் பேச்சாளர் தகவல்

முல்லைத்தீவிலிருந்து புலிகள் தப்பி விடாதபடி முப்படையினரும் சுற்றிவளைத்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி. கே. பி. தஸநாயக்க நேற்று தெரிவித்தார்.

முல்லைத்தீவை புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் இராணுவத்தின் ஒன்பது படைப் பிரிவினர் தாக்கு தல்களை நடத்தி முன்னேறிவரும் அதே சமயம் வடக்கு, கிழக்கு கடற் பரப்பின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் தலைவரும், அவரது சகாக்க ளும் கடல் வழியாக எந்த வகையிலும் தப்பிச் செல்ல முடியாது என்று உறுதியாக தெரிவித்த அவர் கடற்படையினர் நான்கு நிலைகளாக பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் கடற் படையினரின் 25ற்கும் அதிகமான படகு கள் 24 மணி நேரம் முழுமையான ரோந் துக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தாக வும் அவர் குறிப்பிட்டார். இதற்கு மேல திக மாக கடற்படையின் டோரா படகுகளும், கடற்படையின் விசேட படைப் பிரிவுகளும் கடமையில் ஈடுபடுத் தப்பட்டுள்ளதுடன், புலிகள் தப்பிச் செல்லு தல், பிரவேசித்தல் மற்றும் விநியோ கங்களை மேற்கொள்ளுதல் போன்றவற் றையும் தடுத்து நிறுத்த போதிய பாது காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புலிகள் இயக்கத் தலைவரும் அவரது சகாக்களும் கடல் வழியைப் பயன்படுத்தி தப்பிச் செல்வதாயின் பெருந்தொகையான படகுகள் தேவைப்படும். இந்நிலையில் கடற்படையினரின் பாதுகாப்பை மீறி எந்த நிலையிலும் தப்பிச் செல்ல முடியாது என்றும் புலிகளின் எத்தகைய நடவடிக் கைகளுக்கு முகம் கொடுக்க பாதுகாப்பு படையினரும், கடற்படையினரும் தயார் நிலையிலுள்ளதாகவும் கடற்படைப் பேச் சாளர் தசநாயக்க மேலும் சுட்டிக்காட்டினார்.

படகு தாக்கியழிப்பு

இதேவேளை, சுண்டிக்குளம் கடல் நீரேரி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற் புலிகளின் பாரிய படகு ஒன்றை இலக்கு வைத்து விமானப் படையினர் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

விமானப் படைக்குச் சொந்தமான ஜெட் ரக போர் விமானங்களை பயன்படுத்தி நேற்றுக் காலை 11.20 மணியளவில் நடத்தப்ப ட்ட இந்த விமானத் தாக்குதலில் கடற்புலிகளின் பாரிய படகு தாக்கியழிக்கப் பட்டுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

இதேவேளை, முதலாவது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் சுண்டிக்குளப் பகுதியி லிருந்து புலிகள் தப்பி ஓடுவதையும், பின்வாங்கிச் செல்வதையும் படையினர் அவதானித்துள்ளனர். இதனையடுத்து நேற் றுப் பிற்பகல் 1.00 மணியளவில் விமானப் படையினர் தப்பிச் செல்லும் புலிகளை இலக்கு வைத்து மற்றுமொரு விமானத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த விமான தாக்குதல் வெற்றியளித் துள்ளதாக விமான ஓட்டிகள் உறுதி செய் துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
Thanks Thinakaran

No comments:

Post a Comment