என்னை ஆனையிறவிற்கு கொண்டு செல்லுங்கள், எனது மகன் அழித்தொழித்த புள்டோசர் வாகனத்தை பார்க ஆசைப்படுகின்றேன். இராணுவ வீரனின் தாயார்
1991ம் ஆண்டு புலிகள் ஆனையிறவு முகாமைத் தாக்கிய போது அம்முகாமை நிர்மூலமாக்கும் நோக்குடன் 1991 யூலை 1ம் திகதி வெடிமருந்து நிரப்பிய புள்டோசர் வாகனத்துடன் முகாமினுள் நுழைந்தனர். அதன் நுழைவை தடுப்பதற்காக படையினர் போராடிய போது அது வெற்றியளிக்கவில்லை. அதன் அபாயத்தை உணர்ந்த சிங்கரெஜிமென்டைச் சேர்ந்த கோப்ரல். காமினி குலரத்ன எனும் வீரர் அவ்வாகனத்தினுள் ஏறி தன்னுடைய கிரனேட் ஒன்றை வெடிக்கவைத்து தானும் தற்கொலை செய்துகொண்டதுடன் வெடிகுண்டு நிரப்பிய புள்டோசரை இடைவெளியில் வெடிக்க வைத்த தனது படையினருக்கு நிகழவிருந்த பெரும் அழிவைத் தடுத்திருந்தார்.
பின்நாட்களில் அவரது அந்த தியாகத்திற்காக இராணுவத்தினரால் வழங்கப்படும் அதியுயர் விருதான பரம வீர விபூஷ்சனய எனும் விருது வழங்கப்பட்டிருந்ததுடன் கசலக்க வீரன் என பலராலும் போற்றப்பட்டு வந்தார்.
இன்று ஆனையிறவு முகாம் படையினரால் கைப்பற்றப்பட்டு தனது மகன் வெடித்துச் சிதறிய அந்த புள்டோசர் வாகனம் அங்கு இன்னும் இருப்பதை கேள்விப்பட்ட 61 வயதுடைய அவரது தாய் வை.எல். யூலியட் தன்னை அங்கு கூட்டிச் சென்று அவ்வாகனத்தை காட்டுமாறு தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment