Friday, January 9, 2009

‘வடக்கு மக்களின் சுதந்திரம், ஜனநாயகத்தை எமது படை வீரர்கள் வென்று தந்துள்ளனர்’ - ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை




2009 ஆம் ஆண்டு படையினரின் வெற்றி வருடமென நான் ஏற்கனவே கூறியிரு ந்தேன். பரந்தனை படையினர் முழுமை யாக மீட்டெடுப்பதோடு 2009 ஆம் ஆண்டு உதயமானது. ஜனவரி 2 ஆம் திகதியாகும் போது படையினர் கிளிநொச்சியை முழு மையாக மீட்டனர்.

எமது படையினர் மற்றொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியொன்றை ஈட்டியுள்ளனர். ஆனையிறவு பகுதியை எமது படையினர் இன்று மாலையாகும் போது முழுமையாக மீட்டுள்ளனர்.

அதேபோல, தேவேந்திரமுனை முதல் பரு த்தித்துறை வரையான பகுதியை மீண்டும் இணைக்கும் வகையில் ஏ-9 வீதியை முழுமையாக புலிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 23 வருடங்களின் பின் னரே ஏ-9 வீதி முழுமையாக படையின ரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.

ஒன்பது வருடங்களுக்கு முன்னர் ஆனை யிறவை எமக்கு இழக்க நேரிட்டது. இந்த மோதலில் 359 படையினர் உயிர் நீத்தனர். மேலும் 349 பேர் காணாமல் போனார்கள். 2500 பேர் காயமடைந்தனர்.

அன்று தொடக்கம் எமது படையினர் முக மாலையினூடாக ஆனையிறவைக் கைப்பற்ற பல தடவைகள் முயன்றார்கள். இந்த முய ற்சிகளினால் பெருமளவு படையினர் உயிர் நீத்தார்கள்.

இன்று 53 ஆம் 55 ஆம் படையணியினர் முகமாலையினூடாக ஆனையிறவை முழு மையாக மீட்டுள்ளனர். ஆனையிறவு வெற் றிக்காக கடந்த காலங்களில் உயிர் நீத்த சகல படையினருக்கும் நாட்டின் கெளரவத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

வடக்கினதும் தெற்கினதும் ஒற்றுமையை வெளிக்காட்டும் பாதையாகவே ஏ-9 வீதி குறிக்கப்படுகிறது. ஏ-9 வீதியினூடாக பய ணிக்க மக்களுக்கு சட்ட விரோத பயங்கர வாதத்தின் கட்டுப்பாட்டிற்கு அடிபணிய நேரிட்டது. ஏ-9 வீதியினூடாக பயணித்த மக்களிடம் புலிகள் பல மில்லியன் ரூபா கப்பமாக பெற்றது. அந்த வரலாற்றை எம க்கு ஒருபோதும் மறக்க முடியாது.

புலிகளின் பிடியிலுள்ள இடங்களை மட்டு மன்றி வடக்கு மக்களின் சுதந்திரம் ஜனநாய கம் மற்றும் சமாதானத்தையே எமது படை யினர் வென்று தந்துள்ளனர்.

பயங்கரவாதமில்லாத இலங்கையொ ன்றை உருவாக்கும் மனிதாபிமானப் போரா ட்டமே இன்று முன்னெடுக்கப்படுகிறது. முழு நாடுமே படையினரின் வெற்றிகளு க்கு தமது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரி வித்து வருகி றது. ஆனால் அந்த வெற்றி களை இழிவு படுத்தவும் மக்க ளின் கவனத்தை திசை திருப்பவும் உள்நாட்டு வெளிநாடடு சதிகள் முன் னெடுக்கப்படுகின்றன. இந்த வெற்றிகளுக்கு முன்னின்று உழைக்கும் இராணுவத் தளபதி மீதும் அரசாங்கத் தின் மீதும் பொய்க் குற் றச்சாட்டுகள் சுமத்தவும் அதனூடாக நாட்டில் ஸ்தீ ரமற்ற தன்மையை ஏற்ப டுத்தவும், சர்வதேச ரீதி யில் அவப்பெயர் ஏற் படுத்தவும் சதி முன் னெடுக்கப்படகிறது.

நத்தார் தினத்தில் ஜோசப் பரராஜசி ங்கம் ஆலயமொன் றினுள் வைத்து சுட ப்பட்டார். இதன் மூலம் நாட்டுக்கு சர்வ தேச மட்டத்தில் அபகீர்த்தி ஏற்படுத்த முயற்சி செய்யப்ப ட்டது. சர்வதேச ஊடக தினத் தில் உதயன் பத்திரிகை மீது தாக்கல் நடத்தப்பட்டது.

தொப்பிகல மீட்கப்பட்ட சந்த ர்ப்பத்தில் ஆங்கில பத்திரி¨ கயொன்றின் ஊடகவியலாளர் கடத்தி தாக்கப்பட்டார். பல வரு டங்களின் பின் பயங்கரவாதிகளு க்கு பலத்த தோல்வியை ஏற்படு த்தி விடத்தல்தீவை மீட்ட மறு தினம் வவுனியாவிலுள்ள முகாமொ ன்றின் மீது தீ வைக்கப்பட்டது.

தி. மகேஸ்வரன் கொல்லப்பட்ட போது அரசின் மீதே குற்றஞ் சுமத் தப்பட்டது. ஆனால், புலிகளே இந்தக் கொலையை செய்தனர் என பின்பு உறுதியானது.

கிளிநொச்சி வெற்றியின் சூடு தனிய முன்னர் ஊடக நிலையமொன்று தாக்கப்பட்டது. அதன் பின்னர் நாமறிந்த ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த சகல சம்பவங்களினாலும் வெற்றி கிடைப்பது யாருக்கு? இந்த சதிகளின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை நாம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த உள்ளோம்.

இது எனக்கோ அரசுக்கோ எதிரான சதிகளல்ல. இது முழு நாட்டுக்கும் எதிரான சதியாகும். படையினரின் வெற்றியை கண்டு பீதியடைந்தவர்களே இந்த சதிகளின் பின்னால் உள்ளனர்.

எந்த சவாலுக்கும் முகம் கொடுக்கும் உறுதியுடனே நான் 2005 ஆம் ஆண்டு ஆட்சி பீடமேறினேன். தோற் கடிக்க முடியாது என்று கூறப்பட்ட பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ள எமக்கு சிறிய குழுவின் சதிகளைத் தோற்கடிப்பது இலகுவான விடயமாகும்.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு நாம் உயிரூட்டி வருகிறோம். ஜனநாயகத்துக்கு உயிரூட்டி வருகிறோம். பயங்கரவாதத்தை தோற்கடிப்பதென்பது சமாதானத்திற்கும் சுதந்திரத்திற்கும் உயிரூட்டும் நடவடிக்கையேயாகும்.

பருத்தித்துறையில் இருந்து தேவேந்திரமுனை வரை சுதந்திரமாக பயணிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் மற்றும் மலே மக்கள் ஒற்று மையாக வாழும் நிலையை நிச்சயமாக உருவாக்கு வோம். அந்த வெற்றிக்காக அனைவரும் ஒன்றுபடு வோம். இவ்வாறு ஜனாதிபதி உரையாற்றினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com