புதுக்குடியிருப்பினுள் இராணுவம் புகுந்துள்ளதாக அங்குள்ள மக்கள் வெளியேறியுள்ளனர்.
இன்று புதுக்குடியிருப்பு பிரதேசத்தினுள் இராணுவம் புகுந்து விட்டதாக பரப்பப்பட்ட வதந்தியை தொடர்ந்து அங்குள்ள மக்கள் தமது இருப்பிடங்கள், பொருட்கள் அனைத்தையும் விட்டு விட்டு திக்கு திசை தெரியாமல் ஓடிச் சிரமப்பட்டதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னியின் சகல பிரதேசங்களையும் இழந்து ஓர் சிறிய பிரதேசத்தினுள் மக்களை அடைத்து வைத்திருக்கும் புலிகள் இராணுவத்தினர் அப்பிரதேசங்களினுள் நுழையும் போது மக்களது முடிவுகள் அல்லது செயற்பாடுகள் எவ்வாறமையும் என்பதை பரிசோதிப்பதற்காக இவ்வாறான வதந்திகளைக் கிழப்பி மக்களைச் சோதித்து வருவதாகவும் அவ்வாறு வதந்திகளைக் பரப்புகின்ற போது புலிகள் கூறுகின்ற திசைகளை நோக்கி ஓடாத மக்களை விசாரித்து துன்புறுத்துவதாகவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment