Monday, January 5, 2009

கச்சத்தீவு குறித்த ஜெயலலிதாவின் மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

கச்சத்தீவு தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஆதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு விவரம்:

தமிழகத்தின் ராமேஸ்வரம் கடற்பகுதி பாக் நீரிணைப் பகுதியில் 285 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கச்சத்தீவை கடந்த 1974லிம் ஆண்டு இந்திய அரசு இலங்கைக்கு அளித்தது. இது தொடர்பான ஓப்பந்தத்தில் இருநாடுகளின் பிரதமர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

மன்னார் வளைகுடா, வங்காள விரிகுடா பகுதியில் இருநாடுகளின் எல்லை தொடர்பாக 1976லில் மற்றொரு ஓப்பந்தம் கையெழுத்தானது.

இனால் இந்த ஓப்பந்தங்களை ஏற்படுத்துவதற்காக அரசியல் சட்டத்தில் எவ்விதமாற்றமும் கொண்டு வரப்படவில்லை. எனவே இந்த ஓப்பந்தம் தவறானது.

கச்சத்தீவு முதலில் ராமநாதபுரம் ஜமீன்தாரின் சொத்தாக இருந்தது. ஜமீன்தாரி முறை ஓழிக்கப்பட்ட பின் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தின் பகுதியாக இருந்தது.

இரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவராமல் இந்தியப் பகுதியான கச்சத்தீவை, ஓப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு அளித்தது தவறானது. அரசியல் சட்டத்தின் 368 வது பிரிவை மீறும் செயல்.

எனவே இந்த ஓப்பந்தங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதி மார்கண்டேய கட்ஜு, நீதிபதி பி. சதாசிவம் ஆகியோர் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

இது தொடர்பாக மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் ஏன்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Thanks Dinamani

No comments:

Post a Comment