Sunday, January 4, 2009
தேர்தல்கள் முடிவடையும் முன்னர் பொலிஸ் திணைக்களத்தின் இடமாற்றங்களுக்கு தடை.
மேல் மற்றம் மத்திய மகாணங்களுக்கான தேர்தல்கள் முடிவுறும் வரை பொலிஸ் திணைக்களத்தில் எவ்வித இடமாற்றங்களும் அனுமதிக்கப்படமாட்டாதென தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மத்திய மாகாணத்தில் உள்ள சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை இடமாற்றம் செய்ய முற்பட்டதையடுத்தே இம் முடிவிற்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் நெவில் பியன்டிகம இவ்விடயத்தில் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரெட்ண அவர்களும் உடன்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அவர்களை மாகாணத்திற்கு வெளியே இடமாற்ற எடுத்த நடவடிக்கையை தொடர்ந்தே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாவும் அதே நேரத்தில் பிற மாவட்டங்களில் கடமையாற்றும் பொலிஸார் தேர்தல் இடம்பெறும் மாவட்டங்களுள் நுழைய முற்படின் அவர்கட்கும் இடமளிக்கப்படமாட்டாது என தெரியவருகின்றது.
No comments:
Post a Comment