புலிகளை முற்றாக தோற்கடிப்பதாக உறுதியளித்துள்ளார் இராணுவத் தளபதி.
நேற்று கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட விடயத்தை அறிவிக்கும் விசேட நிகழ்வொன்றில் உரையாற்றிய இராணுவத்தளபதி லெப் ஜெனரல் சரத்பொன்சேகா எதிர்வரும சில மாத காலங்களுள் புலிகள் முற்றாக தோற்கடிக்கப்படுவர் என உறுதியளித்துள்ளார். படையினர் நிலைகொண்டுள்ள நிலைகளில் இருந்து ஆனையிறவிற்கும் முல்லைத்தீவிற்கும் முறையே 2 , 5 கிலோ மீற்றர் தூரங்களே உள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் கடந்த இரு மாதங்கள் இடம்பெற்ற யுத்தத்தில் மாத்திரம் 1500 புலிகளை படையினர் கொன்றொழித்துள்ளதாகவும் மேலும் சிறியதொரு எண்ணிக்கையான புலிகளே எஞ்சியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று கிழக்கில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட புலிகளை வன்னியில் சிறியதோர் பகுதியினுள் முடக்குவதற்கு படையினர் இரு ஆண்டுகளையே எடுத்துள்ளதாக தெரிவித்த அவர் இவ் யுத்தம் கிழக்கில் 2006 ம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment