இன்று மாலை 5.20 மணியளவில் கொம்பனித்தெரு விமானப்படை தலைமையகம் முன்பாக இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 32 பேர் காயமடைந்துள்ளதுடன் 2 பேர் பலியாகியுள்ளதாக தெரியவருகின்றது.
இக்குண்டுத்தாக்குதல் பற்றி மேலும் தெரியவருவதாவது, புறக்கோட்டை பக்கத்தில் இருந்து மோட்டார் வண்டியொன்றில் கொண்டுவரப்பட்ட தற்கொலைதாரி விமானப்படைத்தளம் முன்பாக உள்ள ராண்ஸ் ஏசியா நட்சத்திர விடுதி முன்பாக இறக்கப்பட்டார். மோட்டார் பைசிகிளில் இருந்து இறங்கிய குண்டு தாரி பாதையை கடந்து அனைவருக்கும் சந்தேகம் ஏற்படும் விதத்தில் ஓடுவதை அவதானித்த விமானப்படையினர் அவரை சோதனையிட நெருங்கிய போது குண்டுதாரி வெடித்துச் சிதறியுள்ளார்.
குண்டுதாரியை அவ்விடத்திற்கு கொண்டு வந்து இறக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன. சந்தேக நபர் வழங்கும் தகவல்கள் இன்னும் சிறிது நேரத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment