Saturday, January 10, 2009

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேற முயன்ற மக்களில் 7 பேர் சுட்டுப்படுகொலை



இன்று காலை முரசுமோட்டை கிழக்குப்பிரதேசம் மற்றும் காஞ்சிபுரம் பிரதேசத்தில் இருந்த வெளியேறி படையினரிடம் வந்தடைந்த மக்கள் திடுக்கிடும் தகவலைத் தெரிவித்துள்ளனர். புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறிய தம்மீது புலிகள் சரமாரியாக துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாகவும் அதில் 3 வயதுடைய சிறுமி ஒருத்தி; சிறுவன் ஒருவன் 2 பெண்கள் 3 ஆண்கள் என 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

புலிகளின் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலில் இருந்து தப்பி 49 பொதுமக்கள் படையினரினால் விடுவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு அதில் புலிகளின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்தவர்கள் இருவர் அடங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment