வவுனியா பிரதேசமெங்கும் பிரேதவாடை. 48 புலிகளின் சடலங்கள் வவுனியா வைத்தியசாலைப் பிரேத அறையில்.
வன்னியில் இடம் பெற்றுவரும் யுத்தத்தில் உயிரிழந்த புலிகளது 48 சடலங்கள் தொடர்ந்தும் வவுனியா பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினர் புலிளைத் தொடர்பு கொண்ட போதிலும் புலிகள் அவ் உடலங்களைப் பெற்றுக்கொள்வதற்கு முன்வருகின்றார்கள் இல்லை என அவ்வமைப்பு கூறியுள்ளது.
மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படும் இவ் உடலங்களால் வவுனியா வைத்தியசாலையை அண்டிய பிரதேசங்களில் மிகவும் துர்நாற்றம் வீசுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ் உடலங்களில் 13 பெண்களுடையவை எனவும் சில உடலங்கள் வைத்தியசாலையில் 1 வாரங்களுக்கு மேலாக காணப்படுவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவ்வுடலங்களை புலிகள் பெற்றுக்கொள்ளாத பட்சத்தில் அவற்றை அங்கு புதைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை பொலிஸார் நாடியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment