கண்டி நகரப்பகுதியில் கடந்த 25ம் திகதி சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த 3 இளைஞர்களை கண்டி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த அவசர சேவைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பிரதம பரிசோதகர் அனுருத்த பண்டாரநாயக்க தலைமையிலான குழுவினர் இவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். முல்லைத்தீவு, விசுவமடு, பரந்தன் பிரதேசங்களைச் சேர்ந்த இவர்கள் கண்டி வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவரை பார்வையிடும் நோக்குடன் கண்டி வந்ததாக தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment