Tuesday, January 27, 2009
புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் உள்ள 300 நோயாளிகளை புலிகள் மனித கேடயங்களாக பாவிக்கின்றனர். ஐசிஆர்சி , ஐ.நா
நேற்றுக் காலை புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் மிகவும் நோய்வாய்ப்பட்டிருக்கும் 300 நோயாளர்களை வவுனியா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக எடுத்துவரச்சென்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரும் ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார திணைக்களத்தை சேர்ந்தோரும் புலிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு வைத்தியரின் வேண்டுதலுக்கிணங்க படையினரின் அனுமதியை பெற்ற ஐசிஆர்சி மற்றும் ஐ.நா அதிகாரிகள் 16 அம்புலன்ஸ்சுகள் 7 லொறிகள் மேலும் ஓர் விசேட வாகனங்களுடன் 3 வைத்தியர்கள் 12 தாதிகள் 8 உதவியாளர்கள் சகிதம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களை கொண்டுவரச் சென்றபோது அங்கு ஆயுதங்கள் சகிதம் சென்ற புலிகள் நோயாளிகளை வெளியே கொண்டுவர அனுமதியாது அவர்களை திருப்பியனுப்பியமையானது பலத்த விமர்சனத்திற்கும் கண்டனத்திற்கும் உள்ளாகி வருகின்றது.
கடந்த 4 நாட்களுக்கு முன்னர் ஐ.நா சபையினர் ஏழுத்து மூலமாக புலிகள் ஐ.நா மற்றம் அரச சார்பற்ற நிறுவனங்களை சுயமாக செயற்பட அனுமதிக்க வேண்டும் என கேட்டிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ள அதிகாரிகள் தாம் தமது தலைமைக் காரியாலயத்தை தொடர்பு கொண்டு இது விடயமாக தெரியப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment