கொழும்புக்கும் அனுராதபுரத்திற்கும் இடையிலான குளிரூட்டப்பட்ட சொகுசு கடுகதி ரயில் சேவை ஆரம்பிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இன்றிரவு இச்சேவைக்கான ஒத்திகை ஓட்டம் இடம்பெறும் என அறிவித்துள்ள புகையிரத திணைக்களம் இதன் சேவையை 3 மணித்தியாலயங்களில் வழங்க முடியுமா என்பதை பரீட்சிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இவ்விடயத்தில் வெற்றி ஏற்பட்டால் அடுத்த மாதத்திலிருந்து சேவையை ஆரம்பிக்க உள்ளதாகவும் தற்போதைய கொழும்பு அனுராதபுரம் ரயில் சேவை 5 மணித்தியாலயங்கள் எனவும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment