Thursday, January 29, 2009
நான்கு புலிகளுக்கு அமெரிக்காவில் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை.
கடந்த 2006ம் ஆண்டு ஆகஸ்ட மாதம் 19ம் திகதி புலிகளியக்கத்திற்காக விமான எதிர்ப்பு ஏவுகணை உட்பட பல ஆயுதங்களை கொள்ளவனவு செய்ய முற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட புலிகளின் நான்கு உறுப்பினர்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் நேற்று 25 வருடகால சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. ரஸ்ய மற்றும் அமெரிக்க தயாரிப்புக்களான மேற்படி ஆயுதங்களை புலிகள் கொள்வனவு செய்ய முற்பட்ட போது அமெரிக்க புலனாய்வுத் துறையினர் ஆயுத விற்பனை முகவர்கள் போல் பாசாங்கு செய்து அவர்களை மடக்கியிருந்ததுடன் புலிகளின் பெருந்தொகையான பணமும் அப்போது முடக்கப்பட்டிருந்தது.
இவர்களைக் கைது செய்த அமெரிக்க FBI நிறுவனம் அமெரிக்காவில் புலிகளுக்கு ஆதரவான செய்பாடுகளில் ஈடுபடுவதோ அன்றில் அவ்வியக்கத்திற்காக நிதி சேகரிப்பதோ பிரச்சாரத்தில் ஈடுபடுவதோ தண்டனைக்குரிய குற்றமாகும் என தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment