Thursday, January 29, 2009

புதுக்குடியிருப்பில் இருந்து 226 நோயாளிகள் வவுனியா கொண்டுவரப்பட்டுள்ளனர்.

வன்னியில் உள்ள மக்களை புலிகள் மனித கேடயங்களாக வைத்துள்ள நிலையில் அங்கு யுத்த இடர்பாடுகளுள் காயமடைந்தும் நோய்வாய்ப்பட்டும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அவதியுறும் மக்களை சிகிச்கைக்காக வவுனியா கொண்டுவருவதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா சபையினர் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் பயனாக 226 நோயாளிகளும் அவர்களை பராமரிக்கவென 139 மக்களும் வவுனியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நேற்று வவுனியா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதியர் சகிதம் சென்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா ஊழியர்கள் புதுக்குடியிருப்பு எல்லையில் உள்ள இராணுவத்தினரிடம் இம்மக்களைப் பெற்றுக்கொண்டு வவுனியா வைத்தியசாலை வந்தடைந்துள்ளனர். புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சர்வதேச சங்கத்தினர் இம்மக்களை விடுவிக்கப்படாத பிரதேசங்களில் இருந்து இராணுவத்தினரின் புதுக்குடியிருப்பு எல்லைக்கு அவர்களை கொண்டு வந்த இராணுவத்தினரிடம் பாரம் கொடுத்திருந்ததாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் இந்நோயாளிகளை மீட்கச் சென்றிருந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் மற்றும் ஐ.நா அதிகாரிகள் புலிகளினால் அனுமதிக்ப்படாத நிலையில் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் இவ்விடயத்தை மேலிடத்திற்கு அறிவித்திருந்ததுடன் அவை பெரும் கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் ஆளாகி இருந்த நிலையில் செய்வதறியாத புலிகள் நேற்று இவ்விடயத்திற்கு அனுமதிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment