புலிகள் பாவித்து வந்த 152 மி. மீ. ரக ஆட்டிலறி ஒன்றை பாதுகாப்புப் படையினர் நேற்றுக் காலை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
விசுவமடு பிரதேசத்தில் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர். இந்த ஆட்டிலறியை கண்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
விசுவமடு கிழக்கு பிரதேசத்தில் இந்த ஆட்டிலறியும், 70 வெற்று ரவைகளும் புதைக்கப்பட்டிருந்த நிலையிலே படையினர் மீட்டெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
58வது படைப் பிரிவின் 10வது கஜபா படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜனக உடுவோவிட்ட தலைமையிலான படைப் பிரிவினர் இந்த ஆட்டிலறியை கைப்பற்றியுள்ளனர்.
இந்த ஆட்டிலறி மூலம் 17 கி. மீ. தொடக்கம் 24 கிலோ மீற்றர் தூரம்வரை தாக்குதல் நடத்த முடியும்.
No comments:
Post a Comment