நேற்று இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அவர்களை சந்தித்து உரையாடினார். 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கை அரசியல் யாப்பில் கொண்டுவரப்பட்ட 13ம் திருத்தச் சட்டத்தை முடிந்த சீக்கிரம் நடைமுறைப் படுத்துவதாக முகர்ஜி அவர்களுக்கு ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக தெரியவருகின்றது.
பேச்சுவார்த்தை முடிவில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய ஜனாதிபதி இந்திய
அரசியல் தலைவர்கள் இலங்கையில் உள்ள களநிலவரங்களை நேரில் வந்து பார்வையிட வேண்டும் எனவும் அவர்கள் புலிகளுக்கு ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு அரசியல் தீர்வொன்றை நோக்கி நகருமாறு அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment