Wednesday, December 31, 2008

அம்பாறை-சொறிக்கல்முனைப் பிரதேச மக்களை TMVP யினர் சந்தித்து கலந்துரையாடினர். சட்ட விரோத மதுபாண விற்பனைக்கு முற்றுப்புள்ளி.



அம்பாறை மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய கிராமமாக விளங்குகின்ற சொறிக்கல்முனைக் கிராம மக்களை அம்பாறை மாவட்ட TMVP அரசியல் துறைப் பொறுப்பாளரும் மாவட்டத்திற்கான ஜனாதிபதியின் இணைப்பாளருமாகிய இனியபாரதி அவர்களின் தலைமையில் TMVP யினர் சந்தித்து கலந்துரையாடினர்.

அம்மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை அங்குள்ள இளம் சமூகத்தினர் TMVP யினருக்கு தெரியப்படுத்தியதையடுத்து இவ் ஓன்று கூடல் இடம்பெற்றது. அங்குள்ள மக்களின் சாதாரண வாழ்கைக்கைக்கு பிரதேசத்தில் இடம் பெறும் சட்டவிரோத மதுபாண விற்பனை மிகவும் இடையூறாக அமைந்துள்ளமை மேற்படி கலந்துரையாடல்களின் போது வெளிவந்துள்ளது. குறிப்பாக 500 குடும்பங்கள் வாழுகின்ற அக்கிராமத்தில் நாளொன்றுக்கு 600 ரூபா விகிதம் 700 போத்தல் சாராயம் விற்பனை செய்யப்படுவதாகவும் இதன் வெளிபாடாக அங்குள்ள சிறுவர் சிறுமியர் பாடசாலைகட்கு செல்லமுடியாமல் வறுமையில் வாழவேண்டிய நிலை தோன்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலைமை எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை மக்களுக்கு விரிவாக எடுத்துக்கூறிய இனியபாரதி அவர்கள் அக்கிராமத்தில் சட்ட விரோத மதுபாண விற்பனையில் ஈடுபட்டுள்ளோரை அழைத்து உடனடியாக அவ்வியாபாரத்தை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் இவ்விடயத்தில் பொதுமக்களது ஒத்துழைப்பையும் நாடியுள்ளளார்.




No comments:

Post a Comment