பாரளுமன்ற உறுப்பினர் முரலிதரன் கபினட் அமைச்சராகலாம்.
பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜெயசூரியா அமைச்சர் பதவி துறந்துள்ளதை தொடர்ந்து அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் வினாயகமூர்த்தி முரலிதரன் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கரு ஜெயசூரியாவின் வெளியேற்றத்தை தொடர்ந்து வெற்றிடமாக உள்ள பொது நிர்வாக அமைச்சுக்கு வினாயகமூர்த்தி முரலிதரன் அவர்களை நியமிப்பது தொடர்காக அரசியல் உயர்மட்டங்களில் பேச்சுக்கள் நடைபெற்று வருகின்ற போதிலும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என தெரியவருகின்றது. மேற்படி அமைச்சுக்கு அமைச்சர் சரத் அமுனுகம அவர்கள் நியமிக்கப்பட்டு பிறிதொரு அமைச்சு வினாயகமூர்த்தி முரலிதரன் அவர்களுக்கு வழங்கப்படலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment