Sunday, December 7, 2008

புலிகளின் மேலும் ஆறு உடல்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் பாரமெடுத்துக்கொண்டனர்.

வன்னி களமுனையின் குமுளமுனை, அக்கராயன் குளம், துணக்காய், தந்திரிமலை ஆகிய பிரதேசங்களில் புலிகளுடன் ஆங்காங்கே இடம்பெற்ற மோதல்களில் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆறு புலிகளது சடலங்களை சர்வதேச செஞ்சிலுவை நிறுவனத்தினரிடம் படையினர் கையளித்துள்ளனர். இச்சடல்களைப் பெற்றுக்கொண்டு ஐசிஆர்சி யினர் அச்சடலங்களை புலிகளிடம் கையளிக்கும் பொருட்டு நேற்று ஓமந்தைச் சோதனைச் சாவடியூடாக புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளதாக பாதுகாப்புத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment