முரளிதரன் எம்பி மட்டக்களப்பு மாவட்ட பொது மக்களுடன் சந்திப்பு
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்கள் கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்ட அரச உயர் அதிகாரிகளையும் பொதுமக்களையும் நேரில் சந்தித்து மாவட்ட மக்களின் தேவைகளையும், குறைகளையும் கேட்டு இனங்கண்டு கொண்டதோடு இவற்றை கூடிய விரைவில் நிவாத்தி செய்து கொடுப்பதற்கான வாக்குறுதிகளையும் வழங்கியுள்ளார். இச் சந்திப்பு மாவட்ட தேனகத்தில் இடம்பெற்றதாக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்கள் 17.12.2008 நேற்று தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாகாணப் பணிப்பாளர் பொன் செல்வநாயகம் தலைமையிலான சக உத்தியோகத்தர்களை சந்தித்து கிழக்கு மாகாண இளைஞர், யுவதிகளின் தொழில் வாய்ப்பு உள்ளிட்ட வேறு பல விடயங்களையும் கலந்தாலோசனை மேற்க்கொண்டனர். இச் சந்திப்பின் போது விவசாயம், கைத்தொழில், அழகியற்க்கலை உள்ளிட்ட பல்வேறு தொழில்த் துறைகளிலும் சுய தொழில் பயிற்ச்சித் திட்டங்களை கூடியளவில் ஏற்டுத்தி வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு சுய தொழில் வாய்ப்பை வழங்குவதற்கான முன்னேற்ப்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டன.
0 comments :
Post a Comment