அலம்பில் பிரதேசம் படையினரிடம் வீழ்ந்துள்ளது.
கடற்புலிகளின் பிரதான கடற்படை முகாம் அமைந்திருந்த நாயாறை ஒட்டிய அலம்பில் நகரப்பிரதேசம் படையினர் வசம் வீழ்ந்துள்ளதுடன் புலிகளின் பிரதான வழங்கல் பாதையாய இருந்த புளியங்குளம் சந்தியும் படையினர் வசம் வீழ்ந்துள்ளதாக படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
59ம் படைப்பிரவின் இரண்டாம் கொமாண்டோ அணியினர் புளியங்குளம் சந்தியை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தன் முலம் ஏ-9 வீதியின் 8.5 கிலோ மீற்றர் பகுதியை தமது பூரண கட்டுபட்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதாகவும் முல்லைத்தீவு மத்திய பிரதேசத்தில் இருந்து 12 கிலோமீற்றர் இப்பால் உள்ள அலம்பில் பிரதேசத்தையும் கைப்பற்றி புலிகளை மேலும் சிறிய பிரதேசத்தினுள் அடக்கியுள்ளதாகவும் அச்செய்தி தெரிவிக்கின்றது. மேலும் அச்செய்தியில் அலம்பிலில் 1992ம் ஆண்டு நிலைகொண்டிருந்த படையினர் சத்பால படைநடவடிக்கைகளைத் தொடர்ந்து தந்திரோபாயமாக விலகியிருந்தாகவும் தற்போது 16 வருடங்களின் பின்பு தாம் அவ்விடத்தை தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றது:
0 comments :
Post a Comment