Friday, December 26, 2008
பாக்கிஸ்த்தான் எல்லையில் குவிக்கப்படும் இந்தியப்படைகள்
பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் எல்லையை ஓட்டிய பகுதியில் இந்திய ராணுவத்தின் முப்படைகளும் உஷார் நிலையில் உள்ளன. குடியரசு தினத்தையொட்டி இந்தியா மீது வான் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் மீண்டும் திட்டமிட்டுள்ளனர் என்ற உளவுத்தகவலை அடுத்து முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஜனவரி 26லிம் தேதி குடியரசு தின விழாவின்போது தில்லி மாநகரின் மீதே வான் தாக்குதலை நடத்தவும், கொல்கத்தா நகரில் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி பெரும் நாசத்தை ஏற்படுத்தவும் இந்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டிருப்பதாக இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளன.
இதையடுத்து இந்திய மேற்கு எல்லையில் விமானப்படையைச் சேர்ந்த போர் விமான பைலட்டுகளுக்கும் தொழில்நுட்ப உவியாளர்களுக்கும் அளித்திருந்த விடுப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அனைவரும் அவரவருக்கு உரிய படை தளங்களில் பணியில் சேருமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தில்லியையும் வடக்குப் பகுதி வான் ஏல்லையையும் காப்பதற்காக தில்லியை அடுத்த ஹின்டான் என்ற தளத்துக்கு விமானப்படையின் ''மிக்லி29'' ரக போர் விமானங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. விமான எதிர்ப்பு பீரங்கிகளும், ஏவுகணை பொருத்திய விமானங்களும் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன.
கடல்பரப்பில் கடலோரக் காவல் படையும், கடற்படையும் தங்களுக்குள் ஓருங்கிணைப்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளன. அத்துடன் அந்தந்த மாநில காவல்துறைத் தலைவர்களும் ராணுவத்தின் உளவுப்பிரிவுகள் அளிக்கும் தகவல்களைக் கவனமுடன் பரிசீலிக்கத் தொடங்கியுள்ளனர். அதே போல, சந்தேகத்துக்குரியவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. கம்ப்யூட்டர் மூலம்தான் சில தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன ஏன்பதால் செல்போன், கம்ப்யூட்டர் தகவல் பரிமாற்றங்களில் துப்பு கிடைக்கிறதா என்று விழிப்புடன் பார்க்கப்படுகிறது.
கடலோரப் பகுதிகளைக் கண்காணிக்க இந்தியாவிடம் உள்ள அத்தனை ரேடார்களையும் மாலைபோல இணைத்து ஓரு பகுதியையும் விடாமல் கண்காணிக்கும் ஏற்பாடு தொடங்கிவிட்டது.
கடல் வழியாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டால் அதன் கடற்படையை கராச்சி துறைமுகத்திலேயே மூழ்கடிக்க இந்திய கடற்படைக் கப்பல்களுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளைப் பொருத்தும் வேலை தொடங்கிவிட்டது.
காஷ்மீர் உள்ளிட்ட இமயமலையின் அடிவார மாநிலங்களில் குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கும் பருவத்தில் பனி உருகும். அப்போது பயங்கரவாதிகள் நாட்டுக்குள் ஊடுருவும் ஆபத்து இருப்பதால் தரைப்படையினர் அப்பகுதிகளில் விழிப்புடன் கண்காணிப்பைத் தொடங்கிவிட்டனர்.
பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து நேரடியாக வரும் வழிகள் அடைக்கப்பட்டுவிட்டன ஏன்பதால் நேபாளத்திலிருந்து உத்தரப்பிரதேசம், பிகாருக்கு வந்து அங்கிருந்து பிற மாநிலங்களுக்குச் செல்கின்றனர். அல்லது வங்கதேசம் வழியாக வந்து மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் நுழைந்து அங்கிருந்து இந்தியா வருகின்றனர். ஏனவே வங்கதேசத்தை ஓட்டிய நிலப்பகுதியில் ஏல்லை பாதுகாப்புப் படையும் ராணுவமும் காவல், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளன.
No comments:
Post a Comment