Tuesday, December 30, 2008
செலான் வங்கியின் பணிப்பாளர் சபை செயற்பாடுகள் நேற்று முதல் நிறுத்தம் வங்கிச் செயற்பாடுகள் வழமை நிலையில்
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை செலான் வங்கியின் பணிப்பாளர் சபை யினது செயற்பாடுகளை நேற்று முதல் நிறுத்தி வைத்துள்ளது. அச்செயற்பாடுகளை இலங்கை வங்கி மேற்பார்வை செய்யவுள்ளது.செலான் வங்கியின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் வங்கியில் பணம் வைப்பிலிட்டுள்ளவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டுமே இலங்கை மத்திய வங்கி இச்செயற்பாடுகளை முன்னெடுத்தி ருப்பதாக மத்திய வங்கி வட்டாரங்கள் கூறுகின்றன.
இருப்பினும் மத்திய வங்கியின் நாணயச் சபை செலான் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தமது வங்கிக் கணக்கைத் தொடருமாறும் புதிதாக கணக்குகளை ஆரம்பிக்க இருப்போர் தங்களது செலான் வங்கியுடனான தமது செயற்பாடுகளை தொடருமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
செலான் வங்கியின் செயற்பாடுகள் வழமை போல் தொடருவதுடன் அதன் பணிப்பாளர்களுக் கோ சேவை புரிவோரு க்கோ இதனால் எவ்வித பாதிப்புக்களும் ஏற் படாதெனவும் இலங்கை மத்திய வங்கி சுட்டிக்கா ட்டியுள்ளது.
இதேவேளை செலான் வங்கி பி.எல்.சி. இன்று (30) முதல் வழமைபோல் வாடிக்கையாளர்களின் சேவைகளுக்காக திறந்தி ருக்குமென மத்திய வங்கி யின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment