பெற்றோல் விலை குறைக்கப்படாவிட்டால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும். ஜே.வி.பி
உச்ச நீதிமன்றத்தின் தீர்பினை மதித்து பெற்றோலின் விலையை 100 ரூபாய்களுக்கு அரசு குறைக்க வேண்டும் என கூறியுள்ள ஜே.வி.பி, அரசாங்கம் இவ்விடயத்தை இழுத்தடிக்குமாக இருந்தால் நாடளாவிய மட்டத்தில் மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டங்களை நாடாத்த நேரிடும் என எச்சரித்துள்ளது.
இது விடயமாக நேற்று ராஜகிரியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய ஜே.வி.பி யின் பாராளுமன்றக்குழுத் தலைவர் அனுரகுமார திசாநாயக, அரசாங்கம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து அதன் பயனை மக்கள் அடைய அரசு ஆவன செய்ய வேண்டும் எனவும் கடந்த காலங்களில் உலகசந்தையில் எரிபொருள் விலை உயரும்போது இங்கு எரிபொருளின் விலையை சமநேரத்தில் அதிகரித்த அரசாங்கம் உலகசந்தையில் எரிபொருள் விலை குறையும்போது அதன் பயனை எம் மக்கள் அனுவபிக்க வழிவிடவில்லை என்றும் குற்றம் சுமத்தினார்.
0 comments :
Post a Comment