இந்தியாவிற்கு தப்பி ஓடும் புலிகள் வள்ளங்களை அநாதரவாக விட்டுச் செல்கின்றனர்.
வன்னியில் படையினரின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் ஓமந்தை, யாழ் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளுள் பாதுகாப்புத் தேடி தமது குடும்பத்தினருடன் புலியுறுபினர்கள் சரணடைந்து வருகின்றனர். அதன் மறுபுறத்தில் புலிகளின் கடற்புலிகள் தமது வள்ளங்களுடன் இந்தியாவை நோக்கியும் ஓடித்தப்பி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக பொதுமக்களிடம் இருந்து கிடைத்த தகவல்களில் அடிப்படையில் இந்திய தனுஸ்கோடி பிரதேசத்தில் தேடுதல் மேற்கொண்ட படையினர் கைவிடப்பட்ட நிலையில் அநாதரவாக கிடந்த 05 வள்ளங்களை கண்டுபிடித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் சுப்பிரின்டண்ட் சென்தில் வேலன் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளதுடன் அவர் மேலும் கரையோர பிரதேசங்களில் 3 மேற்பட்ட சடலங்கள் வெவ்வேறு இடங்களில் புதைத்து காணப்பட்டதாகவும் இவை மரண பரிசோதனையின் பின்பு யாருடையதென தெரியவரும் எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வள்ளங்களில் துப்பாக்கி வேட்டுக்கள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment