காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்க அரசு நடவடிக்கை
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நிர்மாணத்துறை மற்றும் பொறியியல் சேவை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன நேற்று கூறினார். இந்தியாவிலுள்ள பிர்னா கம்பனியுடன் இணைந்து சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், வடக்கு மோதல் முடி வடைந்தவுடன் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை ஆரம்பிக்க திட்டமிட் டுள்ளது. அங்கு பல வருடங்களுக்கு தேவையான சீமெந்து உற்பத்திக்கான கனியப்பொருட்கள் உள்ளன. 5 அடி ஆழத்துக்கு தோண்டினால் 200 வருடங்களுக்கு பாவிக்கப் போதிய கனியப் பொருட்களை பெற முடியும் என்றார்.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற் சாலை ஆரம்பிக்கப்படுவதன் மூலம் இலங்கையில் சீமெந்து விலைகள் குறையும் எனவும் அவர் கூறினார்.
0 comments :
Post a Comment