சரியான போர் வியூகமே இன்றைய வெற்றிக்கான காரணம் - கோத்தாபாய
இன்று பயங்கரவாதத்திற்கெதிரான போரில் தாம் வெற்றியடைந்து வருவதாகவும் அவ்வெற்றிக்கு தமது நவீன வியூகங்களே காரணம் என பாதுகாப்பமைச்சின் செயலர் கோத்தாபாய ராஜபக்ச தெரிவிக்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. கடந்த காலங்களில் ஆட்பலத்தையும் இராணுவ உபகரணங்கைளையும் சரியாக பூர்த்தி செய்ய முடியாமையே எமது தோல்விக்கான காரணங்களாக இருந்துள்ளது. அத்துடன் நாம் இன்று போரை இடைநிறுத்தாமல் மேற்கொள்ளும் வியூகமானது புலிகளை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள அவர் இப்போர் நெடுநாட்களுக்கு நீடிக்கமாட்டாதெனவும் புலிகள் தற்போது தமது முடிவிற்கான நாட்களை எண்ணத்தொடங்கியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment