திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் யுனிசெப் உதவியுடன் பாடசாலை புனர்நிர்மானம்.
கடந்த சுனாமி அனர்த்தத்தினால் முற்றாக சேதமடைந்ததை தொடர்ந்து இதுவரை காலமும் தென்னை ஓலையினால் வேயப்பட்டிருந்த சிறியதொரு பந்தலில் இயங்கி வந்த திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள தம்பிலுவில் அர்னோதயா பாடசாலைக்கான கட்டடத்திற்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 4 வருடங்களாக கவனிப்பாரற்று கிடந்த இப்பாடலைக்கான இக்கட்டிடம் ஐ.நா சபையின் யுனிசிசெப் நிறுவனத்தின் பூரண நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டிடத்திற்கான அடிக்கல்நாட்டு வைபவத்தில் யுனிசெப் நிறுவனத்தின் திட்டமிடல் முகாமையாளர் ஹென்றி ஸ்ரெற்றர் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளரும், ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான இனியபாரதி அவர்களும் வலயக்கல்விப் அதிகாரி திரு. காசிம், கோட்டக்கல்வி அதிகாரி திருமதி. திலகவதி பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் பிரதேச பிரமுகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment