கிழக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுப்பு. ரிஎம்விபி ஊடகப்பிரிவு.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி - முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களின் முயற்சியால் கிழக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
* இந்தவகையில் லயன்எயார் ஸ்தாபனத்துடன் கலந்துரையாடி மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, கொழும்பு, ஆகிய மாவட்டங்களுக்கான விமானசேவையை துரிதப்படுத்த தீர்மானம்.
* மட்டக்களப்பு, கொழும்பு புகையிரதசேவை உரிய நாளில் கொழும்புக் சென்று மீண்டும் அதே நாளில் திரும்பி வரக்கூடிய வகையில் புகையிரதசேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளன. நேரங்கள், காலை.05 மணி இரவு.08 மணி.
* சுனாமி அனர்த்தம், இயற்கை அனர்த்தம், பயங்கரவாதம், போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நஷ்ட ஈடாக இவ்வருடத்த்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த 15 மில்லியன் ருபா பணத்தை அமைச்சர் றிசாட் பதியுதின் அவர்களுடன் கருணா அம்மான் கலந்துரையாடி அப்பணத்தை இவ்வருடத்திற்குள் மக்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* கிழக்கு பல்கலைகழகத்தில் காணப்பட்ட பல்வேறுபட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு கருணா அம்மானால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
* கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் முகமாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த அவர்களுடன் தொடர்பு கொண்டு பல்வேறுபட்ட அரச துறைகளில் தருண அருண நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தொழில் வாய்ப்புகள் வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் தேசிய பாடசாலையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கும் உடன் பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான நடவெடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
* பாதுகாப்பின் நிமித்தம் படையினரால் மூடப்பட்டிருக்கும் பல பிரதான வீதிகளை மக்களுடைய போக்குவரத்து வசதிக்காக திற்ப்பதற்காக அதிகாரிகளுடன் கருணா அம்மான் கலந்துரையாடி திறப்பதற்கு முயற்சிகள் மேற்க் கொள்ளப்பட்டிருக்கின்றன.
* மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவருமான கருணா அம்மான் மட்டக்களப்பு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் அரசியல் தலைமை காரியாலயத்தில் படுவான்கரை பிரதேச மக்கள், பட்டிருப்பு பிரதேசமக்களின் குறைபாடுகளை நேரில் கேட்டறிந்து உரிய நடவெடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.
0 comments :
Post a Comment