புலிகளின் செயற்பாடுகளை கண்காணிக்குமுகமாக நெதர்லாந்தில் யூரோபோல் கருத்தரங்கு.
புலிகளது சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடுமுகமாக 2 நாள் கருத்தரங்கொன்று நெதர்லாந்து நாட்டில் இடம்பெற்றுள்ளது. ஐரோப்பிய யூனியனுக்கான பொலிசாரினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இக்கருத்தரங்கில் யுரோபோல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள், அமெரிக்கா உட்பட மேலும் ஆறு நாடுகளின் விசேட பிரதிநிதிகள், சர்வதேச பொலிசார், ஐரோப்பிய யூனியனுக்கான நீதித்துறைசார் அதிகாரிகள் மற்றும் இணைத்தலைமை நாடுகளின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இக்கருத்தரங்கில் புலிகளது சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி மிகவும் ஆளமாக கலந்தாலோசிக்கப்பட்டு எதிர்வருங்காலங்களின் புலிகளின் தகவல்களை திரட்டுவதற்காக ஐரோப்பிய ஓன்றியமும் அமெரிக்காவும் தகவல் மையம் ஒன்றை உருவாக்க உள்ளதாகவும் அதன் அடிப்படையில் அனைத்து நாடுகளும் புலிகளின் சட்டவிரோத நடவடிக்கைகள் விடயமாக தகவல்களை பரஸ்பரம் பரிமாறிக்கொள்வதென்றும் முடிவெடுத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment