தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் சர்வதேச தொடர்புகளுக்கான ஒருங்கிணைப்பாளராக இனியபாரதி நியமனம்.
ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளருமான இனியபாரதி அவர்கள் அவ்வியக்கத்தின் சர்வதேச தொடர்புகளுக்கான ஒருங்கிணைப்பாளராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வினாயகமூர்த்தி முரளிதரன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகின் பல நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்கின்ற எமது உறவுகள் தங்கள் எண்ணங்களையும், சிந்தனைகளையும், கருத்துக்களையும் பரிமாறிக் கொள்வதற்று ஏதுவாகவே இவ்நியமனம் இடம்பெற்றுள்ளது. எனவே புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களின் ஆலோசனைகள், அவர்கள் அவதானித்திருக்கக்கூடிய குறைபாடுகள் அல்லது அவர்களது தேவைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை செவிமடுக்கவேண்டிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளது கடமையை நிறைவேற்றும் பொருட்டு இவ்நியனம் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புகட்கு 0094773971201 - 0094777005423
மின்னஞ்சல் முகவரி: krishanbarathi@yahoo.com
0 comments :
Post a Comment