Wednesday, December 3, 2008

ஜீ. எஸ். பி. சலுகைக்காக ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளும் விசாரணைக்கு இணங்க முடியாது - பிரதமர்




ஆடை ஏற்றுமதிக்கான ஜீ. எஸ். பி. பிளஸ் வரிச் சலுகை யைப் பெற்றுக் கொள்வதற்காக தமது ஆலோசனையின் படி அரசியலமை ப்பில் திருத்தங்களைச் செய்ய வேண்டுமெ ன்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக் கிரமசிங்க நேற்று சபையில் சுட்டிக் காட்டினார். இதற்கு பதில் அளித்த பிரதமர் இரட்ணசிறி விக்ரமநாயக்கா.

இலங்கையை அடிமைப்படுத்தும் எந்தவொரு சட்டத்திருத்தத்திற்கும் அரசு தயாராக இல்லை. ஜீ. எஸ். பி. சலுகைக்காக ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளும் விசார ணைக்கு இணங்க முடியாது என்று தெரி வித்த பிரதமர், வேண்டுமானால், இரா ஜதந்திர மட்டத்தில் தகவல்களைப் பரி மாறிக் கொள்ள தயாரென்று கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிர மசிங்க கருத்துத் தெரிவிக்கையில், சர்வ தேச சமவாயங்களை நடை முறைப்படுத்துவதற்கு ஏதுவாக பாரா ளுமன்றத்தில் சட்டங்கள் நிறைவேற்ற முடியும். தற்போதைய சட்டங்களில் திருத்தங்களைச் செய்தால் மட்டுமே ஜீ. எஸ். பீ. சலுகையைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். ஏன சபையை எச்சரித்தார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com