Thursday, December 4, 2008
இலங்கையின் இறைமை தொடர்பான விடயங்களில் இந்தியா தலையிடாது. அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் அமைச்சர் யாப்பா பேசுகையில் யுத்த நிறுத்தம் செய்யுமாறு இந்தியா இலங்கை அரசாங்கத்தைக் கோரவில்லை. இலங்கையின் இறைமை தொடர்பான விடய ங்களில் இந்தியா தலையிடாது என அமைச்சர் அநுர பிரிய தர்ஷன யாப்பா நம்பிக்கை தெரிவித்தார்.
அம் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் அவர் பேசுகையில் பயங்கரவாதம் இலங்கை மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலைத் தோற்றுவித்துள்ள விவகாரமாகும். இந்தியாவும் பயங்கரவாதத்துக்கு உட்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட உலக நாடுகளில் பெரும்பாலானவை பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு இலக்காகியுள்ள நாடுக ளாகும். அந்த வகையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அனைத்து நாடுகளும் ஒரே நிலைப் பாட்டிலேயே உள்ளன. இலங்கையிலும் படையினர் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
எமது நாடு தனித்துவமிக்க இறைமையுள்ள நாடு. இந்நாட்டின் தேசியப் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துக்கு மிகுந்த கவன முண்டு. இந்த வகையில் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கை களை அரசாங்கம் உறுதியாக மேற்கொள்ளும்.
இதன் ஒரு முக்கிய அம்சமாகவே சர்வ கட்சிப் பிரதி நிதிகள் குழு நியமிக்கப்பட்டு அரசியல் தீர்வொன்றுக்கான ஆலோசனைகள் பெறப்படவுள்ளன. இந்நிலையில் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டு வந்தால் சமாதானப் பேச்சுக்குத் தயாரென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
...............................
No comments:
Post a Comment