இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு தமிழீழம் மலர்வதனூடாகவே நிறைவேறுமாம் என்கிறார் சிவாஜிலிங்கம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் உள்ள பகுதிகள் படையினரிடம் வீழ்ந்து வருகின்ற நிலையில் படையனரை போரை நிறுத்தக்கோரி வருகின்ற தமிழ் கூட்டமைப்பினர் எதிர்வரும் 9ம் திகதி இந்தியா செல்ல உள்ளதாக தெரியவருகின்றது. இந்தியா செல்லும் தமிழ் கூட்டமைப்பின் 22 எம்பிக்களும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புலிகளுக்க உயர்பிச்சை வாங்கிக்கொடுக்கு முகமாக போர்நிறுக்தம் ஒன்றிற்கு அரசை வேண்டுமாறு மண்டாட உள்ளதாக தெரியவருகின்றது.
இவ்விடயம் சம்பந்தமாக இந்திய ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ள சிவாஜிலிங்கம் எதிர்வரும் 09 திகதி இந்தியா செல்ல உள்ள நாம் முதலில் முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழக தலைவர்ளையும் பின்னர் இந்தியப் பிரதமரையும் சந்திக்க உள்ளோம். ஆநே நேரம் நாம் யுத்த நிறுத்தம் சம்பந்தமாக இலங்கை அரசிற்கு எதிhவரும் 10ம் திகதி வரை யுத்தத்தை நிறுத்துவதற்கு காலக்கெடு கொடுத்துள்ளோம். ஆது நிறைவேறாதவிடத்து மனித உரிமைகள் நாளான டிசம்பர் 10ம் திகதி நாம் இந்திய மண்ணில் வைத்து இலங்கை இனப்பிரச்சினைக்கு தமிழ் ஈழம் மலர்வது மட்டுமெ தீர்வாக அமையும் என பிரகடனப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment