அம்பாறை கஞ்சிகுடிச்சாறு தளபதி நகுலன் படுகாயம் நால்வர் பலி.
நேற்றிரவு இராணுவ ஊடுருவி தாக்கும் படையணி புலிகளின் அம்பாறை-கஞ்சிகுடிச்சாறு கட்டளைத் தளபதியின் பதுங்குமிடத்தை தீடீரென முற்றுகையிடப்பட்டு மேற்கொண்ட தீடீர் தாக்குதலில் ஸ்தலத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் தளபதி நகுலன் காயங்களுடன் தப்பிச்சென்றுள்ளார். வெற்றிகரமாக தாக்குதலை முடித்த அணி களம்திரும்பியுள்ளதாகவும் அவர்கள் புலிகளின் பல ஆயுதங்கள் மற்றும் பல தரவுகளை கைப்பற்றி வந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
அம்பாறையில் மாவட்ட இராணுவத்தளபதி ராமிற்கும் கஞ்சிகுடிச்சாறு தளபதி நகுலனுக்குமிடையில் முறுகல் ஏற்பட்டுள்ளநிலையில் இடம்பெற்றிருக்கும் இவ்வூடுருவல் தாக்குதல் அங்குள்ள போராளிகள் மத்தியில் பலத்த சந்தேகத்தையும் மன உளைச்சலையும் கிளப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது சம்பந்தமான மேலதிக தகவல்கள் தரவுகளுடன் தரப்படும்.
0 comments :
Post a Comment