விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் முகவர் இந்தியாவில் கைது. பல பொருட்கள் பறிமுதல்
விடுதலைப் புலிகளுக்கு வழங்க தொலைத்தொடர்பு சாதனங்களை வைத்திருந்ததாக ஆமீர் ஆந்தோணி பரந்தாமனை க்யூ' பிரிவு போலீஸார் சென்னை தாம்பரத்தில் கைது செய்தனர்.
இதுகுறித்து டிஜிபி கே.பி. ஜெயின் வெளியிட்டுள்ள செய்தி:
தாம்பரம் பஸ் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஓரு நபரை சென்னை க்யூ பிரிவு பொலீஸார் சனிக்கிழமை இரவு விசாரித்தனர்.
அவர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அமீர் அந்தோனி பரந்தாமன் ஏன்பது தெரிந்தது. அவர் வைத்திருந்த செயற்கைக்கோள் தொலைபேசியைக் கைப்பற்றிய பொலீஸார் அது குறித்து அவரிடம் விசாரித்தனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பினர் சுவிட்சர்லாந்தில் இருந்து தன்னைத் தொடர்பு கொள்வதற்காக அக்கருவியை வைத்திருப்பதாக அவர் கூறினாராம். அதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
அதில் யாழ்ப்பாணத்தில் இருந்து மனைவியுடன் சென்னை வந்து டிராவல்ஸ் நடத்தி வருவதாக அந்தோனி கூறியுள்ளார்.
இலங்கையில் வன்னியில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கண்ணன் பிரகாஷ் ஆகியோர் அந்தோனியைத் தொடர்புகொண்டு சுவிட்சர்லாந்தில் இருந்து அனுப்பப்படும் பொருள்களை பெற்று ராமேஸ்வரத்தில் உள்ள படகோட்டி மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் இருந்து... இதன்படி சுவிட்சர்லாந்தில் இருந்து ரோம் (ஏ) ஜான்சன் சுகந்தன் ஆகியோர் ஓரு நபர் மூலம் தனக்கு ஆனுப்பிய 8 ஜிபிஏஸ் கருவிகள் 3 செயற்கைகோள் தொலைபேசிகள் 2 செல்போன் ரிபீட்டர்கள் ஆகியவற்றை தாம்பரத்தில் வைத்து அந்தோனி பெற்றுக் கொண்டாராம்.
அதே நபரிடம் இருந்து தனக்கு வந்த 500 கிலோ அமோனியம் நைட்ரேட் செயற்கைக்கோள் தொலைபேசிகள் உள்ளிட்ட மற்ற பொருள்களையும் அச்சிறுபாக்கத்தில் உள்ள அசோக்குமார் ஏன்பவரிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் அந்தோணி விசாரணையில் தெரிவித்தார்.
இலங்கையில் இருந்து விடுதலைப்பு-கள் உத்தரவுக்காக தான் காத்திருப்பதாகவும் உத்தரவு வந்தவுடன் இந்த பொருள்களை இலங்கைக்கு அனுப்ப இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கைது: இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் கூறிய அனைத்து பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தோனி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்
நன்றி தினமணி
0 comments :
Post a Comment