Sunday, December 21, 2008

அம்பாறையில் விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனம் உருவாக்க ஏற்பாடு.



கடந்தகால யுத்தத்தினால் எமது பிரதேச விளையாட்டுக்கழகங்கள் யாவும் செயலற்று போயிருந்தது. ஆனால் இன்று கிழக்கில் ஏற்பட்டுள்ள சிறிய ஜனநாயக இடைவெளியினூடாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்கள் மீண்டும் செயற்பட தொடங்கியுள்ளது.

நேற்று அம்பாறை மாவட்ட சகல விளையாட்டுக் கழகங்களினனதும் பிரதிநிதிகளைச் சந்தித்த அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரும் மாவட்டத்திற்கான ஜனாதிபதி இணைப்பாளருமான இனியபாரதி அவர்கள் அவ்விளையாட்டுக் கழகங்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளைக் கேட்டறிந்ததுடன் அவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளையும் வழங்கினார்.

தமிழ் மக்களிடையே காணப்படும் பிளவுகளை எடுத்துக் கூறிய பாரதி கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை ஒன்றுபட்டு செயல்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து அதன் பொருட்டு விளையாட்டுக் கழகங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஓர் சம்மேளனத்தை உருவாக்கி சிறந்த முறையில் செயல்பட்டு இனிவரும் காலங்களில் தேசியமட்டப் போட்டிகளில் கலந்து கொள்ளுமளவிற்கு தம்மை வழர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com