புலிகளின் மண் அணைக்கட்டுக்களை தகர்த்தெறிந்து இரணமடு குளத்தை அடைந்துள்ள படையினர்.
திருமுருகண்டியில் இருந்து மேஜர் ஜெனரல் ஜகத்டயஸ் தலமையில் முன்னேறும் 57ம் படையணியினர் புலிகளின் மிகவும் பலத்த பாதுகாப்பு அரணாக விளங்கிய பொது மக்களை கொண்டு கட்டுவிக்கப்பட்ட 8 அடி உயரமான மண் அணைக்கட்டுகளை தகர்த்தெறிந்து இரணமடுக்குளத்தை அடைந்துள்ளனர்.
இப்பாதுகாப்பு அணைக்கட்டின் உதவியுடன் பலத்த எதிர்ப்புக்காட்டிய புலிகள் படையினரது அகோர தாக்குதலுக்கு முகம்கொடுக்க முடியால் பின்வாங்கியுள்ளதாகவும் படையினர் அங்கு புலிகளின் மேலும் சில பங்கர்களை அழித்து நாசமாக்கியுள்ளதாகவும் பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அச்செய்தியில் இன்றைய விடுவிப்புகளுடாக ஏ9 பாதையின் கிழக்கே இரணமடுகுளம் வரையான முழுப்பிரதேசமும் தமது கட்டுப்பாட்டினுள் வந்துள்ளதாக தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment