Friday, December 26, 2008

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் தாத்தா போல வேடமணிந்த நபர் கொலைத்தாக்குதல்



அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா போல உடையணிந்து வந்த துப்பாக்கிதாரி சரமாரியாகச் சுட்டதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது.

இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக லாஸ் ஏஞ்செலிஸ் நகரில் பொலிஸார் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், கிறிஸ்துமஸைக் கொண்டாடிக் கொண்டிருந்த ஒரு வீட்டுக்குள் நுழைந்து குடும்பத்தவர்கள் மீது தனது கைத்துப்பாக்கியால் எப்படி கண்மூடித்தனமாக சுட்டார் என்பது பற்றிய நெஞ்சை உறையவைக்கும் புதிய தகவல்கள் வெளி வந்துள்ளன.

கிறிஸ்துமஸ் தினத்துக்கு முதல் நாள் லாஸ் ஏஞ்செலிஸ் நகரின் ஒரு அமைதியான புறநகர்ப் பகுதியான கொவினாவில் என்ன நடந்தது என்பது பற்றிய ஒரு துல்லியமான படத்தை கோர்க்கும் முயற்சியில் பொலிஸார் ஏற்கனவே வெற்றிகண்டுள்ளனர். புரூஸ் ஜெஃப்ரி பார்தோ என்று அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி சமீபத்தில்தான் நிறைய பிரச்சினைகளோடு விவாகரத்து நடந்திருந்தது. அவருக்கு வேலை போய்விட்டிருந்தது என்றும் தனிமையான ஒரு வாழ்க்கையை அவர் வாழ்ந்துவந்தார் என்றும் கருதப்படுகிறது.

Thanks BBC

No comments:

Post a Comment