கொழும்பு நகரின் பாதுகாப்பிற்கென பிரதான இடங்களில் வீடியோ கமரா ஜனவரி மாதம் முதல் அமுல்
கொழும்பு நகரின் பாதுகாப்பிற்கென கொழும்பிலுள்ள பிரதான வீதிகள் மற்றும் இடங்களில் ஜனவரி மாதம் முதல் வீடியோ கெமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணரத்ன நேற்றுக் கூறினார்.
28 இடங்களில் இவ்வாறு கெமராக்கள் பொருத்தத் திட்டமிடப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காகவும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்காகவும் இந்த விசேட திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக ஜப்பானிலிருந்து வீடியோ கமராக்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதோடு இந்த நடவடிக்கைகளைக் கவனிக்கவென கணனி மயப்படுத்தப்பட்ட விசேட நிலையமொன்றும் அமைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
0 comments :
Post a Comment