கிழக்கில் புதிய கட்சி ஓன்று உதயமாவதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்கின்றார் இனியபாரதி.
பாராளுமன்ற உறுப்பினர் முரலிதரன் தலைமையில் புதிய கட்சி ஒன்று உதயமாக உள்ளதாக கொழும்பை தளமாக கொண்டுள்ள சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்ததை தொடர்ந்து பல இணையத்தளங்களும் அச்செய்தியை பிரசுரித்திருந்தது. இவ்விடயம் தொடர்பாக இலங்கைநெற் சார்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் சர்வதேச நாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளர் இனியபாரதி அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது அச்செய்தியை அவர் முற்றாக மறுத்துள்ளார்:
அவர் இவ்விடயம் சம்பந்தமாக கூறுகையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாகிய நாம் இன்று கிழக்கிலே எமது அரசியல் தளத்தை அமைத்துள்ளோம். நாம் தமிழீழ விடுதலைப் புலிகளியக்கதில் இருந்து பிரிந்து வந்த போது ஓர் இராணுவக் கட்டமைப்பை வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருந்தது. அவ்வாறு நாம் இராணுவக்கட்டமைப்பை எம்முடன் வைத்துக்கொள்ளும் போது புலிகள் எனும் பெயரை எம்முடன் வைத்துக்கொள்ளவே தீர்மானித்திருந்தோம். காரணம் இராணுவ ரீதியில் நாம் பூனைகள் அல்ல. இன்றைய நிலைமைகளில் நாம் எமது இராணுவக்கட்டமைப்பை கலைக்க முடிவுசெய்துள்ளோம். அவ்வாறு அமைப்பின் இராணுவக்கட்டமைப்பு கலைக்கப்படும்போது எமது இயக்கத்தின் பெயரிலுள்ள புலிகள் எனும் பதம் நீக்கப்படும். ஆகவே கட்சியின் பெயர் மாற்றம் புதியதோர் கட்சி உதயமானதாக அர்த்தப்பாடாது எனக் கூறினார்.
0 comments :
Post a Comment