Sunday, December 14, 2008

பகிஸ்கரிப்பில் குதிக்க உள்ள கிழக்குமாகாண வைத்தியசாலை ஊழியர்கள்.

கிழக்கு மாகாண சபை தமது மேலதிக நேரங்களுக்கான கொடுப்பனவுகளை எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் வழங்காவிட்டால் மாகாணத்தில் உள்ள சகல வைத்தியசாலைகளையும் சேர்ந்த ஊழியர்கள் எதிர்வரும் 16ம் திகதி செவ்வாய்கிழமை பகிஸ்கரிப்பில் குதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது விடயமாக கருத்து தெரிவித்துள்ள அகில இலங்கை சுகாதார ஊழியர்கள் திணைக்களத்தின் தலைவர் காமினி குமாரசிங்க, கடந்த யூலை மாதத்தில் இருந்து கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வைத்தியசாலைகள் ஊழியர்கள் இரவு பகலாக சேவைபுரிந்துள்ள போதிலும் அவர்களுக்கான மேலதிக நேரத்திற்கான கொடுப்பனவுகளும் விசேட கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ள அவர் இக்கொடுப்பனவுகள் யாவும் 15ம் திகதிக்குள் வழங்கப்படாவிடின் பகிஸகரிப்பு தவிர்கமுடியா ஒன்றாகும் என்பதுடன் மாகாண சபையிடம் போதிய நிதிவசதி இல்லாவிட்டால் சுகாதார அமைச்சிடம் இருந்து அதை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com