விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் இயக்கத்தோடு காங்கிரஸ் உறவு வைத்துக் கொள்ளாது என்று மத்திய திட்டத்துறை இணையமைச்சர் வி. நாராயணசாமி கூறினார்.
காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு 124வது ஆண்டு தொடக்க விழா புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் மத்திய அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:
புதுச்சேரி தமிழகத்தில் சில கட்சிகள் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை இழிவாகவும் ராஜீவ் படுகொலையை விமர்சனம் செய்தும் பேசி வருகின்றனர்.
விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் இயக்கத்தோடு காங்கிரஸ் உறவு வைத்துக் கொள்ளாது. காங்கிரஸை பொறுத்தவரை இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு உண்டு. இலங்கை தமிழர்களுக் ஆதரவு என்ற போர்வையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் இயக்கங்களை உளவுத்துறை கண்டறிய வேண்டும்.
இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருகிறது. அதைச் சீர்குலைக்கத் தீவிரவாதிகளை ஊக்குவித்து குண்டுவெடிக்கச் செய்கிறார்கள். மும்பை குண்டுவெடிப்புக்குப் பிறகு பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்று நினைத்தனர். ஆனால் நமது பொருளாதாரம் பலமாக இருக்கிறது.
மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் காங்கிரஸ் செயல்படுகிறது. மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை காங்கிரஸ் தொண்டர்கள் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றார் நாராயணசாமி.
முதல்வர் வி. வைத்திலிங்கம் எம்எல்ஐ தியாகராஜன் முன்னாள் முதல்வர்கள் எம்டி ஆர் ராமசந்திரன் எஸ். ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உசேன் எழுதிய வெங்கடசுப்ப ரெட்டியார் அம்மானை என்ற நூலை காங்கிரஸ் தலைவர் ஐ.வி. சுப்பிரமணியன் வெளியிட அதை மத்திய அமைச்சர் நாராயணசாமி பெற்றுக் கொண்டார்
நன்றி தினமணி
No comments:
Post a Comment