அம்பாறை மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டுள்ள அபிவிருத்திக் குழுக்களின் மாதாந்தக் கூட்டம் நேற்று திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சகல அபிவிருத்திக் குழுக்களின் பிரதிநிதிகள் , தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் மாவட்டத்திற்கான ஜனாதிபதி இணைப்பாளருமாகிய இனியபாரதி , பிரதேச செயலாளர் , பிரதேச சபைத் தவிசாளர்
என பலரும் கலந்து கொண்டு பிரதேச அபிவிருத்தி தொடர்பான சகல விடயங்களையும் கலந்துரையாடினர். அங்கு வந்திருந்த அபிவிருத்திக் குழக்களின் பிரதிநிதிகள் தத்தமது மாதாந்த அறிக்கையை சபைக்கு சமர்பித்து விளக்கமளித்தனர்.
No comments:
Post a Comment