Sunday, December 28, 2008

முல்லைத்தீவில் மோதல் உக்கிரம். சிறுதொகுதிப் படையினரை காணவில்லை.

நேற்று சிறிலங்கா இராணுவ 59ம் படைப்பிரிவினருக்கும் புலிகளுக்குமிடையில் பாரிய மோதல் இடம்பெற்றுள்ளது. இம்மோதல் நேற்று காலைமுதல் மாலைவரை சற்றும் இடைவெளியின்றி இடம்பெற்றதாக தெரியவருகின்றது. முல்லைத்தீவை நோக்கி முன்னேறி வரும் 59ம் படைப்பிரிவினர் அலம்பில் வடக்கேயுள்ள புலிகளது பாதுகாப்பு மண்அணையை அடைந்த போது அங்கு போர் உக்கிரமடைந்ததாகவும் அதில் புலிகளில் பலர் கொல்லப்பட்டும் அதிக எண்ணிக்கையானோர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பமைச்சகம் தெரிவித்துள்ளது.

அச் செய்தியில் மேலும் படையினர் தரப்பில் சில படையினர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சிறு தொகைப் படையினர் தாக்குதல் அணியில் இருந்து விலச்சென்றுள்ளதாகவும் அவர்களை தேடும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படும் படையினரே புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ள உடல்களாக இருக்க முடியும் என நம்பப்படுகின்றது.

No comments:

Post a Comment