லண்டனில் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட இலங்கையருக்கு சிறைத்தண்டனை.
லண்டன் பிறிஸ்டல் நகரில் சட்டவிரோதமாக குடியேறியிருந்த 44 வயதுடைய மொகமட் கமீட எனும் நபர் 28 வயதுடைய யுவதி மீது பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக பிறிஸ்டல் கிறவுன் நீதிமன்றம் 2வருடங்களும் 9 மாதங்களும் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
கடந்தவருடம் ஆகஸ்ட மாதம் 7ம் திகதி பொது இடம்மொன்றில் நின்ற மேற்படி யுவதியை சனநடமாட்டமில்லாத திறந்த வெளிப்பிரதேசமொன்றிற்கு கொண்டு சென்ற மொகமட் கமீட் அவரை பலாத்தாரமாக தரையில் படுத்தி பாலாத்காரம் புரிந்துள்ளார்.
கிங்ஸ்வூட் பிரதேசத்தில் மாலை 6 மணியளவில் நிர்வாணமாக ஓர் பெண்ணை அவதானித்த பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தகவல் வளங்கியதையடுத்து ரோபேர்ட்ஸரன் வீதி ஈஸ்ரன் பிரதேசத்தில் வசித்து வந்த மொகமட் கமீட் மேற்படி குற்றத்திற்கான சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டார்.
நீதிமன்றில் தனது குற்றங்களை ஒப்புக்கொண்ட மொகமட் கமீட் இற்கு இருவருடங்கள் 9 மாதம் சிறைத்தண்டனை வழங்கிய நீதிமன்றம் சிறைவாசம் முடிந்தவுடன் அவரை நாடுகடத்த உத்தரவிட்டுள்ளது.
0 comments :
Post a Comment